பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. ஐயோ! சிறுத்தை!

“ஹ.....ஹ்.... ஹ.....ஹா......! ஜப்பானில்தானே ப்ஜியூயாமா போன்ற எரிமலைகள் அதிகம் என்று புத்தகங்கள் பேசுகின்றன? இங்கே தண்டையார்ப் பேட்டையில் எரிமலை எங்கிருந்து இப்படி வெடித்துச் சீறுகிறது; ஓங்காரச் சிரிப்புச் சிரிக்கிறது...?

பூபாலன் இப்படி எண்ணினான். இடது கையைத் தலைக்கு அணைகொடுத்து வெளித் திண்ணையில் படுத்திருந்தவன், வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தான்.

“தம்பி!”

“எனக்கு அண்ணன் இல்லையே? யாருக்கு என்னைத் தம்பி என்று கூப்பிட உரிமையிருக்குது?”

“தம்பி!...ஹஹ்ஹா!”