பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

காரனாக ஆக்கவும் எனக்கு இதயம் இருக்கிறது; துணிவும் இருக்கிறது!”

“பேஷ்!”

“பேஷ். பேஷ்! அப்படியென்றால் என் இஷ்டப்படி நீ இங்கேயே என்னுடனேயே தங்கி விடுகிறாயா?”

“அது பகற்கனவு ஐயா, பகற்கனவு!”

“அப்படி யென்றால் முடியாதென்று தான் மறுமுறையும் சொல்கிறாயா?”

“ஆமாம், முடியாது! ... முடியாது ... முடியவே முடியாது...!”

“அப்படியென்றால் இனி நீ இங்கிருந்து மீளவும் முடியாது. இதோ, உன்னை விழுங்கி ஏப்பம் விடக் காத்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுத்தையிடமிருந்து தப்பவும் முடியாது. ஆமாம் மாஸ்டர். முடியாது! முடியாது! முடியாது!”

“எனக்கு இனி என்னைப் பற்றிக் கவலையில்லை. காணாமற்போன என் அருமை நாய்க்குட்டி கிடைச்சும், கடைசி நேரத்திலே அது கை நழுவிப் போச்சு.