பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

33

இப்போ என்னைப் பெற்றவங்களும் என்னைக் கைகழுவிப்பிட்டாங்க. சத்தியமாகச் சொல்றேன்; நான் சாகத் துணிஞ்சிட்டேன்."

“பூபாலா, உன்னிடம் அடைக்கலமடைந்திருக்கும் அந்த நெஞ்சுரத்திற்காகவேதான் தம்பி. உன்னை என் கம்பெனியில் அமர்த்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்!”

“வாஸ்தவம் ஸார், உங்கள் ஆசைக்குக் காரணம் எனக்குப் புரியாமலா போயிடும்? என்னைக் கொண்டு பணம் பண்ணத்தான் நீங்க கோட்டை கட்டுறீங்க, இல்லையா?...”

“இல்லை, தம்பி. உன்னைக் கொண்டுதானா எனக்குப் பணம் கிடைக்க வேணும்? உன் அப்பாவை இப்போது வேலை செய்யும் தொழிற்சாலையிலே சேர்த்து விட்டது நான்தான். அந்த நன்றியில்தான் உன்னை என்னிடம் சேர்ப்பித்துச் சென்றிருக்கிறார். நினைவு வைத்துக்கொள் அப்பனே! ”