பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

தமிழ் ரத்தம் துடிக்கிறது, உன் கேள்வியில். நெஞ்சு இருக்கிறது, உன் கண்ணீரில்!”

“போதும், நிறுத்துங்கள்! வேண்டாம், நீங்க பாடம் பண்ணி வைத்திருப்பதையெல்லாம் பேஷாக ஒப்பியுங்கள். ஆனால், என்னை இங்கிருந்து விடுதலை செய்து அனுப்பிவிட மாத்திரம் தடை போட்டுவிடாதீங்க.”

“இந்தக் குருட்டு இருட்டிலா நீ வெளியேறப் போகிறாய் தம்பி?”

“என்னுடைய அருமை நாய்க்குட்டி மூன்றாம் தவணையாக என்னை விட்டுங் பிரிஞ்சபோதே என் கண்கள் குருடாகிடுச்சு; உலகம் இருட்டாகிப் போச்சு. பயங்கரமான இந்தக் குகை எனக்கு ஒரு பொருட்டல்ல!”

“பூபாலன், உன் அழுகையை நிறுத்தச் சொல்லி இந்த மூன்று நாட்களாகக் கெஞ்சினேன்; இந்த வேண்டுகோளுக்கா இவ்வளவு வியாக்யானம்? இதோ பார்! முதலாவதாக நீ உன் கண்ணீர் வெள்ளத்துக்கு அணை போட்டாக வேணும்.