பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

43

இரண்டாவதாக நீ சிரிக்க வேணும்.” என்றான் அந்த மனிதன். அவனுடைய விரல்கள் பூபாலனின் கன்னத்தில் இழைந்திருந்த கண்ணீர் முத்துக்களை வருடி விலக்கி விட்டன.

பூபாலன் திமிறிக்கொண்டு விலகினான். தன்னை மறந்த நிலையில் விர்ரென்று பாய்ந்து ஓடினான்; எங்கு பார்த்தாலும் பாறைச் சுவர்கள் நந்தியாக வழி மறைத்து நின்றன. ஆத்திரம் தாளவில்லை. வெறி தாளவில்லை. அழுகை மூண்டது; வேதனை மூண்டது. “ஐயோ, என் நாய்க்குட்டி?” என்று கதறியவனாக, பாறையில் ‘படார், படா’ர் என்று தலையை மோதிக்கொண்டான். ரத்தம் ஊற்றெடுத்தது. மயங்கிக் கீழே சாயப்போனான் பூபாலன்.

அப்பொழுது—

“ஐயோ, பூபாலா!” என்ற குரல் முன்னோடிச் சென்றது. அடுத்து, ஒரு சிறுமி பாய்ந்து சென்றாள். தரையில் விழவிருந்தவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் கீழே அமர்ந்தாள். சிறுமியின்