பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு


அன்பு மடியில் சிறுவன் தன் நினைவைக் கொள்ளை கொடுத்துவிட்டுக் கிடந்தான்.

ஒரு நாழிகைப் பொழுதுக் கழிந்திருக்கும்.

பூபாலன் கண்களைத்துடைத்துக் கொண்டான்; கண்மலர்கள் விரிந்தன. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான். கை நீட்டும் தொலைவில் கிடந்த ஒரு பழையக் காகிதக் கிழிசலை அவசர அவசரமாக எடுத்தான். அவனுடைய கைகள் நடுங்கின. வாய்விட்டுப் படித்தான்.

“பூபாலா! பயப்படாதே! இன்று இரவு சர்க்கஸ் கூடாரத்தின் வெளிவாசலில் உனக்காகக் காருடன் காத்திருக்கிறன். உன்னுடைய அருமை நாய்க்குட்டியோடு! நல்ல சமயம் பார்த்துத் தப்பி வந்துவிடு.
இப்படிக்கு உன் அன்புள்ள தங்கை,

பூங்கோதை.”


பூபாலன் அந்தத் துண்டுத் தாளைக் கசக்கி வீசி எறிந்தான். கண்ணிர் கரை உடைத்துப் பொங்கியது. மறுபடியும் தரை-