பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

45


யில் தலையைப் ‘படார், படார்’ என்று மோதிக் கொண்டான். உரைந்திருந்த ரத்தக்கோடுகளில் செந்நிறம் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

“பூங்கோதை! தங்கச்சி! உன் அன்புக்கு ஈடே இல்லை. எனக்காக, என்னை அந்தப் பாவிப் பயல் சர்க்கஸ்காரன்கிட்டே இருந்து விடுவிக்கிறதுக்காக, நீ எவ்வளவு பாடுபட்டியோ? கடைசியா, எல்லாம் வீணாகிப் போச்சே? புலி வாயிலேருந்து தப்பி, சிங்கம் வாயிலே வந்து அகப்பட்டுக்கிட்டேனே? தெய்வமே, என்னைப் பெற்றவங்கதான் அடியோடு மறந்து விட்டாங்க—நீ கூடவா இப்படி மறந்திடணும்? அறியாத வயசு; சின்னப் பையன்; எனக்கா இத்தனைபெரிய சோதனை...?”

சிறுவன் பூபாலன் வாய்விட்டுப் புலம்பினான். சித்தம் தடுமாறியவனைப் போன்று, அப்படிப் பிதற்றினான்.

“அண்ணா!”

வெட்டிப் பாயுமே மின்னல். அம்மாதிரி திரும்பிப் பார்த்தான் அவன்.