பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

47


சிட்ட உன்னுடைய வெற்றியை நினைச்சா அப்படி அட்டகாசச் சிரிப்புச் சிரிக்கிறே? இல்லை, பச்சை இரத்தத்தைக் குடிக்கப் போகிறோமே என்ற போதை வெறியிலே நீ அப்படி எக்காளமிட்டுச் சிரிக்கிறாயா? ஆனா, ஆண்டவன் உன்னைக் கண்டு பரிகாசமாகச் சிரிக்கிறதை மட்டும் நீ மறந்திடாதே...?” என்று ஆத்திரத்துடன் பேசினான் பூபாலன்.

அப்பொழுது ஒர் அதிசயம்!...

என்ன ஆச்சரியம்? கொள்ளைக் கூட்டத் தலைவனுக்குக் கூட கண்ணிர் வருமா? அவனுக்குக்கூட இதயம் என்ற ஒன்றை மறக்காமல் கொள்ளாமல் பிரம்மா படைத்திருக்கிறானா...?

”தம்பி, இதோ இந்தக் கடுதாசியைப் பார். உன்னால் எழுதப்பட்டதுதான். இது பற்றி உனக்கு நினைவிருக்கிறதா? நீ சர்க்கஸ் கூடாரத்திலேயிருந்து தப்பப் போகிற துப்பு பூங்கோதைக்குத் தெரிஞ்சுது; பூங்கோதை தக்க ஏற்பாடுகளோடு வெளி வாசலிலே காத்துக்கிட்டிருந்துச்சு. நீ பார் விளையாடின கையோட நாய்க்