பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

குட்டியுடன் குதிச்சேயில்லையா? அப்போது துப்பாக்கி வெடிச்ச ‘டுமீல்’ சத்தம் கேட்டுச்சு. நீ தாவிப் பாய்ஞ்ச கார் என்னுடையது — மெய்தான், கொள்ளைக் கூட்டத் தலைவனுடையது. நான்தான் உன்னையும் — பூங்கோதையையும் காப்பாற்றி, காரிலே வைத்துக் கொண்டு புறப்படப் போனேன். அப்பொழுது திரும்பவும் சர்க்கஸ் தலைவன் நம் எல்லோர் பேரிலும் குறி வைத்துச் சுட்டான். உன்னையும் பூங்கோதையையும் காப்பாற்ற வேணுமே என்ற பதட்டத்திலே, உன் நாய்க்குட்டியைப் பற்றிக் கவனிக்க முடியல்லே. அது எங்கே போச்சோ, தெரியவும் இல்லை. தம்பி, கண் சிமிட்டுற நேரம் தாமதிச்சு இருந்தால்கூட, நாமெல்லாம் கூண்டோடு கைலாசம் போயிருக்க வேண்டியதுதான். கடவுள் புண்ணியத்திலே நல்ல வேளை தப்பிச்சிட்டோம். தம்பி, பயப்படாதே! உன்னையும் பூங்கோதையையும் என் குழந்தைகள் போலக் காப்பாற்றுகிறேன். என் சொல்லை நம்பு...!” என்று கெஞ்சினான் கொள்ளைக்காரன்.