பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

49

“முடியாது! நீ என்னைக்கொல்: நான் கவலைப்படல்லே. ஆனா, என் தங்கச்சியை உன்னாலே ஒன்ண்னும் செய்ய முடியாது; ஞாபகம் வச்சுக்க. தங்கச்சி, வா; புறப்படுவோம்!” என்று சொல்லிப் பூங்கோதையின் கையைப் பிடித்துக் கொண்டான்; எதிரே குறிக்கிட்டு.நின்ற அந்தக் கொள்ளைக்காரனை விலக்கி விட்டு நடந்தான் பூபாலன.

“தம்பி! தங்கச்சி!”

கொள்ளைக்கூட்டத் தலைவன் அவர்கள் இருவரையும் வழி மறைத்தான்.

“சீ! போ! எ” ன் று ஆத்திரம் பொங்கக் கூறினான் பூபாலன். அதே சடுதியில், அருகில் கிடந்த ஒரு கழியை எடுத்து அவன் மீது வீசினான் பூபாலன். கள்வனின் மண்டையில் ரத்தம் பீறிட்டது.

“அப்பா!” என்ற குரல் வானை முட்டியது.