பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

“ஆ!” என்று கதறினான் பூபாலன்... கீழே கிடந்த கத்தியொன்றை எடுத்து எதிரே வீசினான்.

“ஆ!” என்ற எதிர்க்குரல் கேட்டது. எதிரே அந்தக் குரலுக்குடைய உருவம் நின்றது.

“ஐயோ! சர்க்கஸ்காரன்... சுகுமாரன்!”

சில வினாடிகள் தேய்ந்தன.

“தம்பி பூபாலன்! உன்னைக் கைது செய்திருக்கிறோம். இதோ, நீ கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கும் இந்த வைரச் சங்கிலி திருட்டுச் சொத்து. இதோ பார் ‘சர்க்கஸ் சுகுமார்’ என்ற எழுத்துக்கள் இந்தச் சங்கிலியின் டாலரில் மின்னுகின்றன!... சர்க்கஸ்காரர் சுகுமாரனுடையதாம் இந்தச் சங்கிலி! அத்தோடு, நீ அவரைக் கத்தியால் குத்த யத்தனித்த குற்றம் வேறே! ம்... புறப்படு தம்பி, அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு!...”

சட்டம் சிரித்தது; சிரித்துக் கொண்டேயிருந்தது!