பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. விடுதலை! விடுதலை!

றங்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் என்றுமில்லாத கூட்டம். அடுத்த கட்டிடத் திலுள்ள மாஜிஸ்ரேட் கோர்ட்டிலும் ஜனங்கள் கூடி நின்றனர்.

பெரியவர் ஒருவர் சொன்னார்: “பாவம், பூபாலன் நல்ல பையனாச்சே! பிறந்த மண்ணிலேயே—பூவைமா நகரி லேயே முருகேசன் தங்க நினைச்சிருந்தான். போதாத காலம், அப்பன் மனசை ஒடியச் செய்ய, மகனுக்கு—அறியாத பிள்ளைக்கு இப்படி ஜெயிலும் விலங்கும் வந்து விடிஞ்சிருக்குது. படம் பிடிக்கப் பட்டணத்துக்காரங்க வந்த அதிசயத்தையே நம்ப நாடு நகரம் கதை கதையாய் பேசுது. அதுக்குள்ளே சட்டத்தின் அதிசயமான இந்தக் கதையையும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அந்த சர்க்கஸ்காரனோட வைரச் சங்கிலியை இந்தச் சின்-