பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

னப் பிள்ளை திருடிடிச்சாம். அதுக்காக அவனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டி கையோடு, விலங்கையும் கைக்கு மாட்டிப் பிட்டானே, பாவி...! பட்டணத்துப் போக்கிரின்னா சரியாய்த்தான் இருக்கிறான்!.... ம்!... ஆண்டவன் விட்ட வழி! அரசாங்கத்தின் நியாயம் எப்படி இருக்கப் போகுதோ?... ஹும்!...படைச்சவனின் நீதி எப்படித் தீர்ப்புச் சொல்லப் போகுதோ?...வரவர உலகம் உருப்படாமல் போகுது. இல்லையானா, இந்தப் புயல் அடிச்சு ஊர் உலகத்தை இப்படித் திமி லோகப் படுத்தியிருக்குமா?”

காலை மணி பதினொன்று..

அரசாங்கச் சேவகன் கூப்பாடு போட்டான்.

கூடியிருந்தவர்களின் கவனம் ஒன்று கூடியது.

சிறுவன் பூபாலன் கைதிக் கூண்டில் விலங்கும் கையுமாக, கண்ணீரும் கம்பலையுமாக நின்றான். அருகே போலீஸ் ஜவான்கள் இரண்டு பேர் பாதுகாப்பிற்-