பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

65

காக நின்றார்கள். ஓர் ஓரத்தில் பூங்கோதையின் தந்தை டைரக்டர் பரசுராம். பூங்கோதை, சர்க்கஸ்காரர் சுகுமாரன், பூபாலனின் அப்பா முருகேசன் ஆகியோர் நின்றார்கள்.

நாற்காலியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் சிந்தனைக் கோடுகள் கிழிக்கப்பட்டிருந்தன. அவருடைய கையில் அந்த வைரச் சங்கிலியும் அந்தக் கத்தியும் மின்னிக் கொண்டிருந்தன.

பட்டணத்துக்கு இந்தக் ‘கேசை’ மாற்ற முயன்ற டைரக்டர் தோற்றார். பட்டணத்துக்கு இந்த விசாரணையை மாற்றத் தேவையில்லை என்று வாதாடிய சர்க்கஸ்காரர் வெற்றி பெற்றார்.

விசாரணை நடந்தது. இரு தரப்பு வக்கீல்களும் வாதப் பிரதிவர் தங்களை முடித்துக் கொண்டார்கள்.

மாஜிஸ்டிரேட்டின் கவனம் தன் மேஜை மீதிருந்த தாளில் ஓடியிருந்த எழுத்துக்களில் ஈடுபட்டிருந்தது. பூபாலனின் வாக்குமூலம் அது: