பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

"...என் பெயர்தான் பூபாலன். என் பிறந்த ஊர் அறந்தாங்கியிலிருக்கும் பூவைமா நகரம் என்பது. என் அப்பா பிழைப்பு காரணமாகத்தான் சென்னைப் பட்டணத்துக்குப் போனார். அப்பாவுக்கு இந்த சர்க்கஸ்கார முதலாளி சுகுமாரன்தான் சிபாரிசு பண்ணி வேலையில் அமர்த்தினார். நான் சினிமாப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டதை இவர் எப்படியோ அறிந்து, தன்னுடைய சர்க்கஸ் கம்பெனியில் என்னைச் சேர்த்துவிடத் துடியாய்த் துடித்தார். எனக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை. ஒருநாள் என்னைத் தந்திரமாக தன்னுடைய இருப்பிடத்துக்குக் கூட்டிச் சென்றார். வேறு ஏதோ ஒரு நாய்க்குட்டியைக் காட்டி அதுதான் காணாமல்போன என்னுடைய நாய்க்குட்டி என்று பொய் சொல்லி, என்னை ஏமாற்றப் பார்த்தார். கடைசியில் என்னுடைய அந்த நாய்க்குட்டியும் கிடைத்தது. ஆகவே, அவருடைய மகள் அல்லி என்ற சிறு பெண்ணின் அன்பு நிறைந்த நிர்ப்பந்தத்தின் பேரில் நான் அங்கு தங்கினேன். எனக்கு என்னவோ சர்க்கஸ்