பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

73

பாங்க—அது நூற்றுக்கு நூறு நிஜந்தான்!... அந்த சர்க்கஸ்காரன் பலே ஆள் தான்!...நெஞ்சில்லாத, இரக்கமில்லாத அந்தப் பாவிக்கு நெஞ்சுள்ள, இரக்கமுள்ள அல்லி மகளாகப் பிறந்திருக்குது... நத்தை வயிற்றிலே முத்து பிறக்கிற கதை தான்!...ஆனா, தங்கச்சி பூங்கோதை, பூங்கோதையேதான்! அது உடம்பெல்லாம், அன்பு, பேச்செல்லாம் அன்பு, செய்கையெல்லாம் அன்புதான்! அதுமாதிரியே தான் அதோட அப்பாவும்!...நான் ஏழை வீட்டுப் பையன்; அதுவோ பணக்காரங்க வீட்டுப் பொண்ணு! மலையும் மடுவும் சடு குடு விளையாடற கதைதான்! ஆண்டவன் பலே கில்லாடிதான்! படைப்பின் புதிர் ரொம்ப அதிசயம். அதைக் காட்டிலும் அதிசயம் வாழ்க்கையின் புதிர்!”

வயதிற்கும் அப்பாற்பட்ட வரப்புக் கோட்டில் நின்று அவனது எண்ணங்கள் ஓடின. சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான்; புதுச்சட்டை, நிஜார் மாற்றினான். வாரிவிடப்பட்ட கிராப்பில் ஒரே ஒரு மயிரிழை