பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

அவன் நெற்றியோடு மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே ஓடினான்; அவனை முந்திக் கொண்டு, ஏப்பம் ஓட்டமாக ஓடியது. ஆறு இட்டிலி, இரண்டு தோசை, ஒண்ணரை டம்ளர் அசல் காப்பி என்றால், காசா, லேசா?

சிறுவன் பூபாலன் கீழத் தெருவிலிருந்து ஓடி வந்தான்.

தம்பி, உன்னை விடுதலை பண்னிட்டாங்களாமே? நல்லவேளை, தம்பி!“” என்றார் காந்திஜி நூல் நிலையக் காரியதரிசி சோமசுந்தர ஆசாரி.

“அடடே, மிஸ்டர் பூபாலனா?...உன் பெயர் ஞாபகம் வந்ததும், உடனே எனக்கு நம் ஊர் எழுத்தாளர் ஒருவரின் புனை பெயரும் ஞாபகத்துக்கு வந்துவிடும்!.டீ சாப்பிடப்பா! அடைக்கலம், இரண்டு டீ போடு...ம்!...அப்படியே உட்காரப்பா பட்டணத்து வாடை அமர்க்களமாய் வீசுதே? ஆமா, நீ மறுபடியும் பட்டணத்துக்கு டேரா துரக்கப் போறியா? உங்க அப்பாரு இங்கே தான் வெள்ளாமை விளைச்சலைப் பார்த்-