பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

77

ஒருகணம் தொடுத்த கண் எடுக்காமல் அந்த நாயைப் பார்த்துக் கொண்டிருந்தான் பூபாலன். குபுக்கென்று கண்கள் கலங்கிவிட்டன. அந்த ஒரு நாள்—கப்பலோட்டிய தமிழனுக்கு சிரம் வணங்கிக் கரம் கூப்பி அஞ்சலி செய்து திரும்புகையில், கார் விபத்துக்கு ஆளாகி உயிர் துறந்த, தாய் நாய் விட்டுச் சென்ற, அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவத்தை அவன் எப்படி மறப்பான்?...வீட்டுக்கு வந்ததும் அந்த நாய்க்குட்டிக்கு உண்டான எதிர்ப்புகளைச் சமாளித்து அதைத் தன்னோடு வைத்துக் கொண்டு வளர்க்கத் திட் மிட்ட போது, அது காணாமற் போன நிகழ்ச்சியைத் தான் அவனால் மறக்க முடியுமா? இல்லை, காணாமற்போன அவனுடைய அருமை நாய்க் குட்டியை சினிமா ஸ்டுடியோவில் கண்ட கண் கொள்ளாக் காட்சியைத் தான் அவன் மறப்பானா? கடைசியில், சர்க்கஸ்காரன் சுகுமாரின் கம்பெனியில் பார் விளையாடினான் அல்லவா? அப்போது, முன் கூட்டியே போட்ட திட்டத்தின்படி