பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

அவனைக் காட்டிக் கொடுக்க இருந்துச்சாம். அதுக்குள்ளே அவனைக் காட்டிக் கொடுத்திட்டுது அவன்கிட்டேயிருந்த ஒரு நாய்க்குட்டி!... இது முதல் அதிசயம்! அடுத்த அதிசயம் என்னன்னா, அல்லி அவனோட வளர்ப்புப் பெண்ணாம்! நீ அங்கே வேலைக்கு இருக்கிறப்பவே அது எல்லா ரகசியத்தையும் உங்கிட்டே சொல்லத்தான் துடிச்சுதாம்; சமயம் வாய்க்கலையாம். இப்போது மூன்றாம் அதிசயம் நடக்கப் போகுது. ரெடி, ரெடி, பார், பார்!” என்று சொல்லிவிட்டுப் பூபாலனுக்கு முன்னே வந்து நின்றாள் பூங்கோதை.

அவர்கள் முன்னிலையில் இப்பொழுது ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டே ‘ஜாம் ஜாம்’ என்று நின்றது.

காண்பது கனவா, நனவா என்றே சிறுவனுக்குப் புரியவில்லை. எதிரில் நின்ற அந்த நாயைக் குனிந்து தொட்டுப் பார்த்தான். அவனை நெருங்கி, அவன் முகத்தை நாக்கால் நக்கியது அது. அன்பு, அன்பு! அன்பு மறுகணம் அவன் அந்த நாயைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு கூத்தாடினான். இரண்டு கண்களும் இரண்டு லட்சம்