பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

81

கண்ணிர் முத்துக்களைச் சரம் தொடுத்து அவனுடைய நாய்க்கு மாலை போட்டன.

“தெய்வமே, நீ நிஜமாகவே உலகத்திலே எங்கேயோ ஒர் இடத்திலே இருக்கத்தான் இருக்கிறாய்! இல்லையானால், என் அருமை நாய் என்கிட்டே கிடைச்சிருக்குமா?” என்று சொல்லியவண்னம் குதித்தான் பூபாலன்.

“பூபாலன், நாய்தான் ரொம்பவும் நன்றியுள்ள பிராணி. அது செத்துவிட்டதாகப் பேப்பரிலே போட்டிருந்த சேதிகூட அந்தச் சர்க்கஸ்காரன் செஞ்ச சூழ்ச்சியே தானாம்! இந்த நாய் குட்டியின் நன்றிக் கடனுக்கு ஈடும் இல்லை; இனையும் இல்லை. அன்றைக்கு சாவிலிருந்து இதைக் காப்பற்றினாய்! அந்த நன்றியை இன்னமும் மறக்கல்லே, பாரு!... சரி, இதோ பார், நாலாவது அதிசயம்!” என்று கூறிக் கொண்டே ஒரு பததிரிகையை எடுத்து நீட்டினார் டைரக்டர் பாசுராம்.

பூபாலன் ஆவல் பொங்கப் படித்தான்:

பிரசித்தி பெற்ற சர்க்கஸ் முதலாளி கைது செய்யப்பட்டார். அவர் வளர்த்த பெண் அல்லியும் நாய்க்குட்டியுமே அவரைக் காட்டிக்