பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 103 மாக்கள் இப்பிரபஞ்சத்தை விரும்பிப் படைத்துக் கொண்டன என்றும் கொள்வதற்கு இல்லை. ஏனெனில் பிரபஞ்சம் பல இன்னல்களாலும் துன்பங்களாலும் நிறைந்துள்ளது. ஆன்மாக்களின் விடுதலை, இப்பிர பஞ்சத்தின் துன்பச் சூழலிலிருந்தும் இப்பிறப்பினின்றும் நீங்குதலேயாகும். இவ்வாறு, பிர பஞ்சத் துன்பங்களி னின்று நீங்குதற்கு விரும்புகின்ற ஆன்மாக்கள் பொருட்டு இப்பிரபஞ்சத்தைப் பிரமம் தோற்றுவித்தற்கு முடியாது. பெருங்கருணையோடு விளங்குகின்ற இறைவன் இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து ஆன்மாக்களை எல்லையற்ற பெரும் துன்பங்களில் ஆழ்த்துவானேன்? இக்கேள்வி, முன்னர்க் குறித்த கேள்வியைவிட ஆழம் குறைந்தது அன்று. இதுவும் எளிதில் விடைகாண இயலாததே ஆகும். ஆன்மாக்கள் படுகின்ற துன்பங் களையும் தீமைகளையும் தடுக்க இயலாத நிலையில் இறைவன் இருப்பானேல், இறைவன் எல்லாம் வல்லவன் ஆதல் எவ்வாறு? துன்பங்களையும், தீமைகளையும் தடுத் தற்கு இயலும் என்றால் ஏன் தடுக்கவில்லை? தடுக்க இயலுகின்றபொழுது தடுக்காது இருப்பது இரக்க மற்றவன் என்று அன்றோ பொருள்படும். - மேலும், இப்பிரபஞ்சத்தில் மக்கள் பலவிதமான நிலைகளை அடைகின்றனர்.நல்லவர்களும்,நேர்மையான வர்களும், வெகுவாகத் துன்புறுதலைக் காண்கிறோம். தீயவர்கள், தழைத்தோங்கு தலையும் பார்க்கிறோம். ஆதலால்,இறைவன் இப் பிரபஞ்சத்தைப் படைத்தவனால் கொடுமை, நீதியின்மை, ஒருதலையான முடிவுகள் கொள்ளுதல் ஆகிய குற்றங்களையுடைவன் ஆதல் வேண்டும். முதற்கேள்வியாகிய பிரபஞ்சக் காரணம் குறித்து நிம்பார்க்கர் ஏனைய வேதாந்திகள் போல் புகழ் வாய்ந்த