பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



104
த.கோவேந்தன்

லீலைக் கொள்கையை அல்லது படைப்பு ஓர் விளையாட்டு என்ற கொள்கையை விளக்குகிறார். இக் கொள்கைப்படி இப்பிரபஞ்சத்தோற்றம் இறைவனிடத்து எவ்விதமான குறையும் இருப்பதாகக் குறிப்பதாகாது. பிரபஞ்சப் படைப்பு இறைவனுக்கு ஒர் விளையாட் டாகும். மன்னன் ஒருவன் விளையாட்டுகளில் ஈடுபடுகிறான். விளையாட்டுகளில் மன்னன் ஈடுபடுவது ஏதோ ஒர் குறைவினை நிறைவு செய்வதற்காக அன்று, இதற்கு மாறாக மன்னன், எல்லா விருப்பங்களும் நிறைவு பெற்ற வனே, நிறைவேறாத விருப்பங்கள் ஏதும் இல்லாததால் மன்னன் தனது விருப்பம்போல், இறைவன் நிறைவு டையவன்; என்றென்றும் இன்பவடிவானவன்; பிர் பஞ்சத்தைத் தனது நிறைவினின்றும் பேரின்பத்தின் விளைவாகப் படைக்கிறான். இக்காரணத்தால் வேதம், ஆனந்தத் தினின்று தோன்றுவதாகவும், ஆனந்தத்தில் நிலைபெறுவதாகவும், ஆனந்தத்தில் ஒடுங்குவதாகவும் விவரிக்கிறது.

லீலா வாதம் எனப்படுவது மிகு திறமையோடு படைப்பின் நோக்கத்தின் விளக்க எழுந்த முயற்சியாகும். உள்பொருளை இயங்கு நிலையிலே, இயக்கமாகக் கருதுவது படைப்பினை எளிதில் விளக்குவதாகும்.

ஹெகல்கருத்துப்படி உள்பொருளின் இயல்பு தன்னைத்தான் புலப்படுத்திக் கொள்ளுதலும் மாற்றம் கொளச் செய்தலுமாகும். இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து நிகழ்வனவாகும். பரம்பொருளும், பிரபஞ்சமும் ஒன்றை யொன்று தொன்றுதொட்டு உட்படுத்துவதாகும். பரம் பொருளின் இயற்கை, பிரபஞ்சமர்க உள்ளது. சிறத்தல் முறைமையினில் உருக்கொள்ளுதல் ஆகும். பரம் பொருளை, நிலையான மாறுதலற்ற நிறைவுடைய உள்பொருள் அன்று. இயல்பிலே, இயங்கு நிலையிலே, எப்பொழுது மாற்றம் கொள்ளும் பொருளாகும். இடையறாது உள்ளது சிறத்தல் முறைமையிலே, இயங்குவதாகும்.