பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம 105 இவ்வாறு, உருக் கொளல் மாறுதல், பிரபஞ்சமாதல் பரம்பொருளின் இயல்பு ஆகும். பரம்பொருள் மாற்றம் கொள்வதால் உள்பொருளன்று. இருப்பு இல்லாத இல்பொருளன்று உள்ளதும் இல்லதும் ஒன்றி உளதாதல் ஆக விளங்குவது தோன்றுதல், ஆதல் என்பது பரம்பொருளின் இயல்பு. - ஒரு பொருள் மற்றொரு பொருளாக ஆதலோ, மாறுதலோ, உள்ளதும் ஆகாது.இல்லதும் ஆகாது.ஆனால் உள்ளதும், அல்லதும் ஒன்றிய ஒன்றாகும்.எடுத்துக்காட்டு: விதை, முளைக்கிறது. முளை, விதையாக இருந்தது; விதை முளையாக இல்லை. விதையின் உண்மை இயல்புமுளைத் தல் ஆகும். விதை, முளை ஆதலே, அல்லது முளைத்தலே, விதையின் இயல்பாகும். இதே போல், பரம்பொருள் இயல்பிலே பிரபஞ்சமாதல் வேண்டும். பிரபஞ்சமாதற்கு எவ்வித நோக்கும், வேண்டுவது இல்லை. வேதாந்திகள் உள்பொருளை என்றும் நிறையுள்ள உள்பொருளாகக் கருதுகின்றனர். இவ்வாறு கொள்ளும் வேதாந்திகள் மேலே குறித்த விளக்கத்தை ஏற்பவரல்லர். அவர்கட்குப் படைப்பு குறித்த நோக்கினை அறிதல் வெல்லுதற்கரிய அருமைப்பாடுடையதாகும் இறைவ்ன், மாறாத நிலையில் தன்னிறைவோடு, என்றென்றும் விளங்குவதனால், இப்பிரபஞ்சத்தை ஏன் படைக்க வேண்டும்? வேதாந்தத்தில் காணப்பெறும் லீலா வாதம் உண்மையிலேயே பிரபஞ்சப் படைப்பின் நோக்கத்திற்கு ஒரு விளக்கம் தருகிறது. செயல்கள் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. நிறைவேறாத விருப்பங்களோ அல்லது குறைவுகளோ செயல்களைத்துாண்டுவன என்ற பொதுக் கருத்தினை லீலா வாதம் மறுக்கிறது. சில செயல் களை விளையாட்டுக்கள் போன்றவை. எத்தகைய குறிப்பும் உடையன அல்ல. மகிழ்ச்சியின் போக்கீடாக