பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

த.கோவேந்தன்

விளையாட்டுக்கள் அமைகின்றன. உள்ளம் நிறைவுடையது.

ஆனால் மகிழ்ச்சி நிறைந்து விளங்குமானால், ஒருவன் பொழுதுபோக்குகளிலே, ஈடுபட்டுக் களைப் பாறலாம். மகிழ்ச்சியின் இயல்பு நிறைந்தபோது வழிதலேயாகும். நிறைவு, புறச்செயல் நிலைகளிலே வெளிப்படும். இதுபோல, இறைவன் படைப்புச் செயலை விளையாட்டாகக் கொள்கிறார். இறைவனின் நிறைவும், பேரின்பமும், புறத்தே படைப்பாக விளங்குகின்றன. இறைவனிடத்துக் குறைவின்மையையோ, நிறைவின்மையையோ படைப்பு குறிக்காது. உள்பொருள்,என்றென்றும், நிறைவுடையது என்ற கொள்கையை ஏற்க வேண்டுமானால், லீலா வாதம் ஒன்றே, இறைவனது நிறை வினையும் காத்து பிரபஞ்சத் தோற்றத்தையும் விளக்கு வதாகும். வீலாவாதத்தை விளக்கிய வேதாந்திகள், நன்கு இதனைச் சிந்தித்த பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.

இங்கு மற்றொரு கேள்விக்கு விடை காணவேண்டியிருக்கிறது. பிரமத்திற்கு படைப்பு இயல்பிலே அமையும் ஓர் விளையாட்டு ஆகலாம். தேவையான ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆன்மாக்களுக்குப் படைப்பு தேவையானதே. இறைவன் ஆன்மாக்களைத் தனது விளையாட்டுக்காக எல்லையில்லாத துன்பத்தில் ஆழ்த்துவது இறைவனை எவ்வாறு இரக்கமுடையவனாகக் கூறுதற்கு இயலும்? முக்கியமான தேவைக்காக இல்லாமல் விளையாட்டுக்காக ஆன்மாக்களை இறைவன் துன்பத்தில் அழுத்துகிறார். இவ்வாறு, துன்பத்தில் ஆழ்த்துபவரை எவ்வாறு இரக்கமுடைவர் என்று கூறுவது?

இறைவன் பிரபஞ்ச விளையாட்டில் ஈடுபடுவது தனக்கென அமையாவிடினும் நோக்கற்றது அன்று, குறிப்புடையதேயாகும். அடிப்படையான காரணமாகிய