பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 த. கோவேந்தன்

   நிம்பார்க்கர் கருத்துப்படிபேதம் அல்லது வேறுபாடு என்பவை (1) குணங்களில் செயல் நிலைகளில் காரணத்தை நோக்க, காரிய நிலையில் வேறுபடுவதும் (2) காரண நிலையில் காரியத்தைக் கடந்து விளங்குவதால், வேறுபடுவதுமாகும். அபேதம் அல்லது வேறுபாடின்மை என்பது: (1) உண்மை நிலையில், காரியமாகக் கருதுகிற பொழுது, காரணத்தின் வேறன்று. காரணமே, உண்மையில் விளங்குவதம் (2) காரியத்தில், காரணம் உள்ளார்ந்த நிலையில் உள்ளதுமாகும். வேறுபாட்டையும், வேறுபாடின்மையையும் கடந்த நிலையையும், உள்ளார்ந்த நிலையையும் மேற்குறித்தவாறு,விளங்கிக் கொண்டால் வேறுபாட்டையும், வேறுபாடின்மையும் ஒத்த நிலையில் கொள்வதில் எவ்வித முரணும் தோன்றாது. இயற்கையில் அமைவனவாகவும், பொருந்துவனவாகவும் இருக்கக் காண்போம்.
   வேறுபாடின்மை என்பது முற்றொருமையைக் குறிக்காது. ஒரு சிறு நீர்த்துளி, கடலில் ஒன்றி விடுவது பேர்ன்ற ஒன்றுதல் என்னும் பொருளை இங்கு வேறுபாடின்மை தரவில்லை. தன்மையில் ஒத்த நிலையில் இங்குக் காண்கிறோம். பிரமம், பிரபஞ்சத்தில் உள்ளார்ந்த நிலையில் விளங்குகிறது. வேறுபாடு என்பது முற்றிலும், வேறுபடுகிற நிலையைக் குறிக்காது.
   மனிதன் மேஜையாக மாட்டான். மனிதன் வேறு, மேஜை வேறு. வடிவங்களில் உள்ள வேறுபாடும், குணங்களில் உள்ள வேறுபாடும்,செயல்நிலைகளிலுள்ள வேறுபாடும், இங்குக் குறிக்கப் பெறுகின்றன.
   பிரமம், பிரபஞ்சத்தைக் கடந்து விளங்குகிறான். இவ்வாறு, இயல்பில் எழும் வேறுபாட்டை அல்லது ஒருமைப்பாட்டை நிம்பார்க்கர் 'சுவாபாவிக போம்”, பேதவாதம் அல்லது இயற்கை வேறுபாடு, வேறுபாடின்மைக் கொள்கை என்று குறிக்கிறார். இது பிரபஞ்சமும்,