பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 த. கோவேந்தன் வேதங்களைப் பயில்வோர் இறைவனது பெருமையை உணர்கின்றனர். இறைவனைத் தனது ஆன்மா எனவே கொள்ளத் தூண்டுகின்றது. தூண்டப்பெற்று இறைவனிடத்துப் பெறுகின்ற எல்லையில்லாத அன்பினாலே பணிந்து நிற்கின்றனர். வேத நூல்களிலே இவ்வகைப் பக்தி விதிக்கப்பெற்றுள்ளது. இவ்வண்ணம் பயிலுகின்ற பக்தியானது மாரியாத பக்தி எனப்படும்.ஏனைய வைணவக் கருத்து முறைகளுள் காணப்பெறும் வேதி பக்தியை (Vaidhi - Baktti) ஒத்ததாக மாரியாத பக்தி அமைகிறது. மாரியாத பக்தர்கள் புருஷோத்தமனோடு ஒன்றிய உணர்வினைப் பெற்று மகிழ்கின்றனர். சில வேளைகளில் மாரியாத பக்தர்கள் இறைவனது நிலையினையும் அடைந்து இன்புறுகின்றனர். அல்லது, இறைவனுக்கு அண்மையில் வாழ்கின்றனர். அல்லது இறைவன் உலகிலேயே வாழ்கின்றனர். மேற்குறித்த விடுதலை வழிகளை வேத நூல்கள் கூறுகின்றன. அதே சமயத்தில் பரம்பொருளை அடைதல், அருளின்றிப் பெறுதற்கு அரியது என்ற குறிப்பையும் அவை தருகின்றன. வேத நூல்களில் காணும் மேற்குறித்த முரணான பகுதிகளை நீக்குவதற்கு, வல்லபர் தனது மாரியாத வாதத்தையும், புஷ்டி வாதத்தையும், பயன் படுத்துகிறார். மனித முயற்சிகளால் பெறத்தக்க ஞானமும், பக்தியும் விடுதலைக்கு வழி கோல்வன. ஞானத்தாலும், பக்தியாலும் அடையும் விடுதலை மாரியாதம் எனப்படும், இறைவனால் அருளப்பெறுகின்ற புஷ்டியாகும். ஞானமோ, பக்தியோ அல்லது இவைபோன்ற வழிகளை மேற்கொள்ள இயலாதவர்கட்கு இறைவன் தனது, அருளினாலே வழங்குகின்ற விடுதலை புஷ்டியாகும். ஞானமோ, பக்தியோ அல்லது இவைபோன்ற வழிகளை மேற்கொள்ள இயலாதவர்கட்கு இறைவன் தனது,