பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 த கோவேந்தன் பகுத்துள்ளனர். அந்நான்காவன: (1) பிரவாகம் (2) மாரியாதம் (3) புஷ்டி (4) சுத்தம். பிரவாக பக்தர்கள் இறைத்தொடர்புடைய செயல்களிலேயே ஈடுபடுவார்கள். மாரியாத நெறியினைச் சார்ந்தவர்கள், இறைவனது குணநலன்களை நன்கு அறிந்து வழிபாட்டை மேற்கொள்பவர்கள் புஷ்டி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றறிவு உடையோர் ஆவர்; சுத்தமார்க்கத்தைச் சேர்ந்த வர்கள். எல்லையில்லாத அன்பினை இறைவனிடத்துச் செலுத்துவோர் ஆவர். சுத்தவகையினர், பெரும்பான்மை யாகக் காணப்பெறுவது இல்லை. இவ்வகை அருமையு டையதேயாகும்.கோபிகள் இவ்வகையைச் சார்ந்தவர்கள். இவ்வகையைச் சிறந்த நிலையில் விளக்குபவர்கள். புஷ்டி பக்தர்கள் நிலைகளையோ மேற்கொள்ளாது முதலிலேயே உறவுபூண்டு இறைவன் பெருங்கருணைக்கு உள்ளாகி இறைவனால் புதிய தெய்வீக உருவைப் பெறுகின்றனர். இறைவனின் எல்லையில்லாத லீலையிலே பங்கு கொள்ளுகின்றனர். பக்தர்களில் உயர்ந்த நெறியினர், கோபிகள்போல் இறைவனது விளையாட்டுகளிலே ஈடுபடுவார்கள். இறை இன்பத்தை இடையறாது எப்பொழுதும் துய்த்த வண்ணமே இருப்பார்கள். இந்த எல்லையில்லாத விளையாட்டில் இறைவனது உறவினாலே பக்தன் பல்வகை இன்பங்களை நுகர்கின்றான். இறைவன் தன்னை முற்றிலும் பக்தனிடத்து ஒப்புவித்து விடுகின்றான்.வல்லபரது கருத்துப்படி இது மிக உயர்ந்த விடுதலையாக அமைவது; இறைவனோடு பக்தன் கொள் கின்ற உறவும், அவ்வுறவினால் அமையும் நுகர்வும் ஆகும். கருமம், ஞானம், பக்தி ஆகியவை முற்காலத்தில் சிறந்து விளங்கின என்றும் வல்லபர் தனது காலத்தில் சூழ்நிலைகளின் காரணமாக மேற்குறித்த நெறிகள் சிறப்பிற்குன்றின என்றும் கூறுகிறார். ஆதலால் விடு தலைக்காக இறைவனது அருளை முற்றிலும் சார்ந்து வாழ வேண்டிய நிலை நேர்ந்துள்ளது. எவன் ஒருவன் தனது