பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 159 கூறுகள் தாமத இராட்சதக் கூறுகளோடு சேர்ந்து பருப் பொருள்கள் அமைவதற்குக் காரணம் ஆகின்றன. பருப்பொருள் ஒர் இடத்து உள்ளபோது, பிற இடங்களில் அதே சமயத்தில் இருத்தல் இயலாது. ஆனால் ஆன்மீக வடிவமோ, சுத்த சத்துவத்தால் அமைந்துள்ள காரணத்தால் யாண்டம நிறைதல் இயலும். இறைவனது திருமேனி சுத்த சத்துவத்தால் அமைந்துள்ள ஆயத ஆதலால், பருப்பொருள்கள் ஒர் இடத்து இருக்கும்போது வேறு எங்கும் இருத்தல் இயலாது. இந்த எல்லைக்கு உட்படுகின்ற தன்மை இறைவனுக்கில்லை. இறைவன் எல்லைக்குட்பட்ட வடிவத்தைத் தெளிவுற நன்கு ஏற்பினும் எல்லைக்குட்படாதவனே. இறைவன் எல்லைக்குட்பட்ட நிலையில் உள்ள வடிவத்தை ஏற்கலாம்; அவ்வடிவத்தில் எளிதில் நாம் இறைவனைத் தெரியலாம்; எல்லைக்குட்பட்ட வடிவம் ஏற்பினும் எங்கும் நிறைகின்ற நிலையினும் அவனைக் காண்கிறோம். இவ்வாறு, எல்லைக்குட்பட்டிருந்த போதிலும், எங்கும் நிறைதல் ஆகிய பண்பினை உடையதாதல், சிந்திக்க வொண்ணாத இறை இயல்களுள் ஒன்றாக அமைகிறது. இறைவனது திருமேனியினைப் பிரிந்து உணர்த்தும் இயல்புகள் சிந்திக்கவொண்ணாதன. திருமேனி குறித்த இயல்புகள் சிந்தித்தற்கு இயலாத நிலையில் அமைவது போல இறைவனது சொரூபமும் அவனது பல்வேறு ஆற்றல்களும் சிந்திக்கவொண்ணாதவையாக அமைகின்றன. இறைவனது சொரூபத்திற்கும் அவனது பல்வகை ஆற்றல்களுக்கும் உள்ள உறவு சிந்திக்கவொண்ணாதது ஆகும். உறவு பேதாபேதம் ஆகும். சிந்திக்க வொண்ணாத பேதாபேதம் என்று இதைக் குறித்தல் வேண்டும். இறைவன் ஒரு நிலையில் தான் செலுத்தும் பல்வேறு ஆற்றல்களின்று வேறுபாடின்றி விளங்குகிறான். ஆனால் கடந்த நிலையிலும் இறைவன் விளங்குகிறான்.கடந்த நிலையில் உள்ள இறைவனின் சுயரூபம் வெவ்வேறு வகைகளிலே