பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 171

    எண்ணம், உணர்ச்சி, செயல் யாவையும் அடிமை உறவு ஊடுருவப் பரம்பொருள் இடத்து ஜீவன் தன்னை ஒப்படைக்கின்றது. தொடக்கத்தில் கருத்து நிலையில் வளமற்ற, அறிவன் இசைவாக அமைந்தது. முடிவிலே தன்னையே அர்ப்பணிக்கின்ற நிலைக்கு உயர்கிறது. அறிவு, உணர்ச்சி,செயல் யாவும் பரம்பொருள் இடத்து அர்ப்பணிக்கப்பெறுகின்றன. ஜீவனது முன்னிலைகளாகிய் அறிவு, உணர்ச்சி, செயல்யாவும் வரையறையின்றி முற்றிலும் ஒப்படைக்கப்பெறுகின்றன.
    சைதன்யரைப்பின்பற்றுவோர்.இவ்வாறு ஒப்படைக்கப்பெற்ற நிலையினைப் பக்தியின் உன்னத நிலையாகக் கருதுகின்றனர்.ஜீவனது உள்ள உறுதியானது இறைவனது உள்ள உறுதிக்கு இடம் தருகின்றது. எல்லைக்குட்பட்ட பண்புகளாகிய சமூக, ஒழுக்கப் பண்புகள் யாவும் பரம்பபொருள் வாழ்வாகிய முழுமையிலே ஒன்றுகின்றன; இம்முழுமை வாழ்வின் ஆட்சிக்கு உட்படுகின்றன.
    இந்த உயரிய பக்தி நிலையை அடைந்த ஜீவனிடத்து ஒரு பெருமுயற்சி தோன்றுகிறது. ஜூவனது முழு வாழ்வும். முழுமையை நோக்கிய வாழ்வாக அமைகிறது. ஜீவன், அறிவு நிலையிலே சரண் புகுதலை மட்டும் கொண்ட தன்று.இந்நிலை, எதிர்மறை நிலையிலே தன்னை ஒன்றும் இல்லாத நிலையில் ஆக்கிக் கொள்ளுதல் ஆகும். ஆனால், ஆன்மீகப் பசி அல்லது கனன்று எழும் முழு அவல் பெற்றால் அன்றி. இத்தாகம் தணிவுறாது. இதனை இராகாத்மிக பக்தி என்பர்.
    இந்த பக்தியானது அறிவுநிலையிலே ஓர் புத்தொளி காணுகின்ற முயற்சியாக மட்டும் கொள்வதற்கு இல்லை. வாழ்வின் பல்வேறு நிலைகளும் ஒவ்வொரு மூச்சும், முழுமை வாழ்வு பெற்று முழுமையினுள் என்றென்றும் அடிமை பூணும் பகுதியாக அமைய விரும்புவதாகும்.