பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 23

நிர்க்குணப்பிரம்ம் எனவும் சகுணப்பிரமம் எனவும் வேறுபடுத்துவதை விசிஷ்டாத் வைதம் ஏற்பதில்லை. தொடர்பு காணும் எண்ணத்தின் இருமை நிலையைக் கடந்ததாக நிர்க்குணப்பிரமம் கருதப்பெறுகிறது. சகுணப் பிரமம் அல்லது ஈஸ்வரன் இதை உண்மைக் கொள்கையில் உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறது. பெரு வழக்கமாக மனம் பரம்பொருளைத் தன் நிலையில் கருதிக் கண்ட உருவ நிலை சகுணப் பிரமம் ஆகும்.

    சகுணப் பிரமத்திற்கும் நிர்க்குணப் பிரம்மத்திற்கும் மிடையே உள்ள வேறுபாட்டினை விசிஷ்டாத்வைதம் ஏற்றுக் கொள்வதில்லை. பேதா பேதத்தை வற்புறுத்தும் பாஸ்கரர், 'யாதவர் ஆகியோர் மேற்குறித்த சகுண, நிர்க்குணக் கருத்து நிலைகள் எவ்வாறு தம்முள் முரன் படுகின்றன என்று விளக்குகின்றனர். இவர்கள் முரண் பாடுகளைப் புலப்படுத்துவதற்கு உரையளவை, கருதல் அளவை, காட்சி அளவை ஆகிய மூன்றினைப் பயன் படுத்துகின்றனர். பிரமத்தை நிர்க்குண நிலையில் வைத்து வெறும் கருத்தியல் நிலையாக, உள்ளதும் இல்லாதும் ஒன்றாவதாகக் கருதுவதை மறுக்கின்றனர். உரையளவை, சாத்திரம் முதலில் சகுணப் பிரமத்தின் உண்மையை வற்புறுத்திப் பின்னர் அதனை ம்றுக்குமானால் தன்னைத் தானே மறுப்பதாகும். அல்லது தன்னுள் முரண்படுவதாகும். அற, சமய உணர்வின் உண்மையினை மறுப்பதாகவும் முடியும்.
   இங்கு எது மறுக்கப்படுகிறது? உள்பொருள் எல்லைக்குட்பட்டது என்ற உண்மையே மறுக்கப்படுகிறதன்றி எல்லைக்குட்படுதலாகிய நிலை மறுக்கப்படுவதில்லை. பரம்பொருள் வரையறைகுட்படுகிறது. ஆனால் பரம் பொருள் இயல்பில், வரையறைகளில் வரையறை அற்றது. தோன்றுகின்ற புலக்காட்சிக்கு உட்படும் இட, கால வரையறைகளில் அடங்கும் உலகு, பொய்த்தோற்றம் உடையது. இல்பொருளாவது என்று கருதினால் அது