பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 த கோவேந்தன் அனைத்தும் கிருபையினால் மேற்கொள்ளப் பெறுவன வாகும். இவ்வுருவங்கள் உண்மை உடையவை; நலம் மிக்கவை. ஈஸ்வரன் எல்லை கடந்த பிரபஞ்ச ஆன்ம வாகப் பிரபஞ்ச லீலை அல்லது படைப்பாகிய விளை யாட்டில் ஈடுபடுகிறான், பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு அழிவு ஆகிய முத்தொழிலும் ஈஸ்வரனுக்கு விளையாட் டேயாகும். அனைத்து உயிர்களின் உள்ளம்தோறும் ஆட்சி புரிந்து அவ்வுயிர்களால் உள்ளுணர்வினாலே தன்னைத் தெளிதற்குரிய நிலையில் விளங்குகிறான். அன்பு, அறத் தின் நிலைகளாகிய நாராயணன் பூர் என்னும் இரண்டு இப்பொழுது குறிக்கப்பெற்ற மூன்று வடிவங்களோடு பிரமத்தின் ஐவகைத் தோற்றங்கள் அமையக் காண்கிறோம். பிரமத்தை இலட்சியமாகக் கருதுகின்ற கருத்து, இறைவனது இயல்பினைப் புலப்படுத்துவதோடு இவ்வுல கில் இறைவனே அதற்குரியவன், முடிவான பேறு என்று குறிக்கும். ஆன்மா, சித்தாகும். இயற்கை அசித் ஆகும். இவ்விரண்டும் இறைவனின் திருப்திக்காகவே இருப்பன வாகும். இறைவன் நெறியாகவும், நெறியினால் பெறு கின்ற இலட்சியமாகவும் விளங்குகிறான். ஆன்மா தன்னுணர்வோடு கூடியது; ஆன்மா விடு தலை உடையது. அற வாழ்விலும், ஆன்மீக வாழ்விலும், ஆன்மா விடுதலை உடையது என்பதை உணர்தல் வேண்டும். இவ்வுணர்வினால் பரமாத்மவே பிரபஞ்சத் தில் உண்மையிலேயே நாடகத்தை நடத்துவோன் என்று தெளிகிறது.இத்தெளிவு இறைவனது கருணை வடிவான அருளாற்றலோடு ஆன்மாவை ஒன்றுபடுத்துகின்றது. இவ்வருளாற்றல் ஆன்மாவினைப் பழைய நிலைக்கு மீட்கின்ற கருத்துடையது, ஆன்மா, இறைவனது அருளாற் றலை உணர்ந்து தனது, அகந்தையை ஒழித்து, தன்னையே இறைவனுக்கு அர்ப்பணிக்கிறது.