பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதத்தில் செழித்த வைணவம்

41


அற, சமய உண்மைகளைப் புறக்கணித்தல் ஆகாது. நுண் உடலில் - ஞானம் தோன்றுதற்குரிய உடலில், உள்ளத்தின் நிலைகள் கருமச் விதியின் விளைவாக அமைவன. அவித்தையினால், ஞானம் மறைப்புக் கொள்ளுமானால் எல்லாவற்றையும் அறிதலாகிய முற்றறிவும், பிரபஞ்ச நிலையிலே ஒருவரை அறியாமை ஆகின்றது. யாவற்றையும், உட்படுத்தும் திரிபுக் காட்சி, ஐயக்கொள்கையையே விளைவிக்கும்.

ஞானம் தன்னுணர்வாகும். ஆதலால் அது ஆன்மாவின் முழுமையான பண்பாகும். ஞானம் தன்னுணர்வுக்கு வழிகோலுவது; தன் இயல்பிலேயே இருப்பது: தன்னாலேயே நிலைபெறுவது. ஆனால், ஞானத்தைக் குணமாகக் கொள்ளின் அது (தருமபூதஞானம்) ஆன்மாவின் பொருட்டு அமைவதாகும். தருமபூதஞானம், ஆன்மாவை வெளிப்படுத்துவதாகும். இவ்விருவகை ஞானங்களும் பிரித்து உணரத்தக்கன தனித்து விளங்குவன - அல்ல.

பிரமத்திற்கு மூன்ற அடைகள் அல்லது பண்புகள் முன்னரே குறிக்கப்பெற்றன. பிரமம் யாவற்றிற்கும் ஆதாரமாக விளங்குவது, யாவற்றையும் நியதிக்குள்ளாக்குவது யாவற்றிற்கும் இலட்சியமாவது; யாவற்றையும்விட மேலான நிலைத்த அழகு வாய்ந்தது. அளவை இயலில் ஆன்மா (ஞாதுரு) பிரமத்தின் (உபதேயம்) காரியமாகும். பிரமம், காரணம் (உபாதானமாகும்). இது, அதனுடைய அபிரதக் சித்த விசேஷணம் அல்லது பிரிக்க வொண்ணாத பண்பாகவும், பிறப்பிடமாகவும், அகநிலையில் அறிவோனாகவும் எல்லை இறந்தோனாகவும் விளங்கும் பிரமத்தின் அம்சம் அல்லது கூறு இதுவாகும். தூய நிலையில் உள்ள, புனிதமான பிரமத்தின் கருவி (ஸேஷா)யாக அறஇயல் ஆன்மா அமைகிறது. அல்லது பிரமத்தின் வேலையாளாக, மகனாக விளங்கிப் பிரமம் நிறைவு காண்பதற்கு வழியாக விளங்குகிறது.