பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

த.கோவேந்தன்

ஆன்மா ஆன்மீக நிறைவாகிய தெய்வீக விடுதலையை நோக்கிப் பணிபுரிகிறது.அழகு இயலில் ஆன்மா, இறைவனோடு நெருங்கிஇருந்து இறைவன் நெருங்கியிருத்தலையும், புனிதமாக இருத்தலையும் அறிந்து, அழகினை நுகர்கிறது. பேரின்பம் விளைப்பதாகப் பிரமம் அறியப் பெறுகிறது.

ஆன்மா, தெய்வ நிலைபெறுகின்ற வகையில் மாற்றுமுறுகிறது. உருமாறுகிறது. ஜீவனின் ஆன்மாகவாக ஆதாரமாக, காப்போனாக, நியதிக்குள்ளாக்குவோனாக, பிரமம் விளங்குகிறது. ஜீவன் அதன் அறிவுக்கு எழுவாயாக, அறிவு நிகழ்வதற்குக் காரணமாக விளங்குகிறது. ஜீவன் மற்றொரு வகையில் நோக்குகிறபொழுது இறைவனின் பண்பாக (பிரகாரம்) விளங்கி, அவனினின்றும் பிரிக்கொணாத நிலையில் விளங்குகிறது. பிரமம், பொருள் ஆக ஆன்மா, அதன் பண்பு ஆகின்றது.

பேதாபேத விளக்கத்துள் ஜீவன் பிரமத்தினின்றும், தோற்றம் கொள்கிறான். பேதாபேத விளக்கம் ஜீவனுக்குள்ள ஒழுக்க ஆன்மீகப் பண்புகளை நீக்கி விடுகிறது. ஒருமைக் கொள்கையுடையோன் தனித்தன்மை என்பது அவித்தையின் கற்பனை என்று கூறுகிறான். இராமானுஜர் பண்பையும் ஒருமையையும் அற இயலையும் அனுபூதியையும் ஒற்றுமைபடுத்தி ஜீவன் தனக்கென அமையும் முழுமையும்,செயலுரிமையும் உடையது. என்றும் அற, ஆன்மீகப் பண்புடையது என்றும் குறிக்கின்றார். ஆன்மா, பரமாத்மாவின் ஒரு கூறு என, விசிஷ்டாத்வைதம் ஆன்மாவின் தனித்தன்மையின் சிறப்புகளைப் பிரித்து, பிரித்துணர்வு நிலையை நீக்கிவிடுகிறது. பிரமத்தினின்றும் தோன்றியுள்ள ஒரு கூறும் ஆதலால் பிரமத்தோடு ஒன்றுகின்ற வாய்ப்பை உடையது.

ஜீவன் பரம்பொருளின் உயிர்பொருளும், உறுப்புமாகும். கருமக் கொள்கையில் கருமத்திற்குக் கொள்ளும்