பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 த கோவேந்தன் நெறிகளும் உள்ளத்தை, உறுதியை எண்ணத்தை நெறிப் படுத்துவனவாகும், ஒழுங்குப்படுத்துவனவாகும். அறிவு நெறி, ஒழுக்கநெறி, உணர்ச்சி நெறி ஆகியவற்றில் குறை பாடுகளை நீக்குகிறது. பிரபக்தி' என்பது இறைவனிடத் தில் ஜீவன் தன்னை முற்றிலும் ஒப்படைப்பது. இங்கு, அனைத்து ஜீவர்களும் எவ்வித வேறுபாடும் இன்றி மேற் கொள்ளத்தக்க நெறி பிரபக்தி'யாகும். ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கும் செயலற்று இராமல் தொண்டுபுரிவதற்கும் வாய்ப்பினை நல்குவது பிரபத்தி'யாகும். ஒவ்வொரு ஜீவனும்இறைவனை நேராக் உள்ளுணர் வினாலே தெளியலாம். பிரமத்திடத்தில் அனைத்துயிர் களும் இடம் பெறுகின்றன. உயிர்தொறும் பிரம்மத்தை உணர்வதால் மற்றையோர்க்குத் தொண்டுபுரிகின்ற நிலை அமைகிறது. பிரமம் அனைத்துயிர்களிடத்தில் இடம் பெறுகின்றது என்று தியான உணர்வையும் செயல்நிலை யையும் விசிஷ்டாத்வைதம் ஒன்று படுத்துகிறது. ஒன்று படுத்தி விசிஷ்டாத்வைதம் தெய்வீக அன்பு, மனித சமுதா யத்திற்குப் பணிபுரிகின்ற ஒரு நிலையை வெளிங் படுத்துகிறது. இராமனுஜர் காலத்திற்குப் பிறகு தென்னாட்டில்பூரீ வைஷ்ணவம் இரு கருத்து முறைகளாக வடகலை என்றும் தென்கலை என்றும் பெயர் பெற்றுச் சிறப்புற வளர்ந்தது. பிள்ளை லோகாச்சாரியார், வேதாந்த தேசிகர் காலத்தில் முற்றிய நிலையை அடைந்தன, வேண்டாத பூசல்களும், பிளவும் தோன்றலாயின. உயரிய ஆன்மீக வளர்ச்சி குறைந்து, பூசல்களாக அமைந்தன. முன்னேற்றம் இப் பொழுதும் நேரான நெறியிலே அமைவதில்லை. இந்திய வரலாற்றில் இடைக்காலத்தில் குறிப்பாக வட இந்தியாவில் இஸ்லாம் பரவி மற்றவர்களையும் தமது மதத்தைத் தழுவச் செய்கின்ற காலத்தில் பெரிய வைஷ் ணவச் சீர்த்திருத்தக் காரர்கள் தோன்றி அதைத் தடைப் படுத்தி ஹிந்து மதத்தை மீண்டும் உயிர்ப்புப் பெற்றுத்