பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

த கோவேந்தன்

உண்டு. சிந்திக்கின்ற ஒவ்வொருவனுக்கும் நிகழ்வனவற்றை இந்தச் சாக்ஷி அறிகிறது.

ஆன்மா, அறிவான், அறிவு, சாக்ஷி அவற்றின் இயல்பான விளக்கநிலை ஆகிய அனைத்தும் ஒன்றுபட்ட ஓர் ஒருமை நிலையிலே நாம் காணுகின்ற வேறுபாடுகளாகும். இவை முற்றிலும் வெவ்வேறு நிலைகளானால், இவற்றை எந்நாளும் ஒன்றுபடுத்துதல் இயலாது. அறிவு நிலையில் கலப்பற்ற முற்றொருமையையோ, அல்லது இரண்டற்ற நிலையையோ வற்புறுத்துதல் என்பது, பொருந்தாதது ஆகும்.
கலப்பற்ற முற்றொருமை என்பது, முரணான உரையாகும். முற்றொருமை விளங்குகின்ற ஒவ்வொன்றிலும், ஒன்றுபடுகின்ற பொருள்களைப் பிரித்தறிய வேண்டியுள்ளது. முற்றொருமை விளங்குகின்ற ஒவ்வொன்றிலும், ஒன்றுபடுகின்ற பொருள்களைப் பிரித்தறிய வேண்டியுள்ளது. முற்றொருமை விளங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். பொருள்களைப் பொருள்கள் என்றும், குணங்கள் என்றும் பகுப்பது வேண்டாத ஒன்றாகும்.
சாக்ஷி என்பது ஆன்மாவேயாகும். ஆன்மா, அல்லது சாக்ஷி எல்லா நிலைகளிலும் தொடர்ந்து உள்ளது. விழிப்பு நிலையில், ஆன்மா, காட்சி, கருதல், உரை ஆகிய அளவைகளால் அறியும் அறிவினைச் சாக்ஷியாக இருந்து அறிகிறது.
காட்சி என்பது அறிகருவிகளுள் சாக்ஷி, மனம், கண், செவி, மூக்கு, நாக்கு, ஊறு போல்வனற்றுள் ஏதேனும் ஒன்று தொழிற்படுவதால் நிகழ்வதாகும். ஆனால் அறிகருவி தானே தொழிற்படாது. இவ்வறி கருவிகள் ஆன்மாவினால் இயக்குறுகின்றன. ஆன்மா, தொழிற்படும் தத்துவமாகும். காட்சியினைப் பகுப்பு முறையில் காணும்பொழுது, ஆன்மா என்பது அயலாக உள்ள