பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

த. கோவேந்தன்

மனமும், புலன்களும் தோற்றுவிக்கும் உணர்வு ஏதாவது ஒரு பொருளைப்பற்றியதாகும். இவ்வுணர்வு சாக்ஷியால் அறியப்பெறுகிறது. ஆன்மாவிற்கு அயலானதால் இது எனச் சுட்டி அறியப்பெறுகிறது. எல்லாப் புறநிலை உறவுகளிலும் மனம் ஒரு மாறுதலுக்கு உட்படுகிறது. இது என்று சுட்டி அறியப்பெற்ற பொருள், காண்பானது மனத்திலே ஒருவகை உருக்கொண்டுள்ளது.

கனவு அற்ற தூக்க நிலையில் சாக்ஷி மட்டுமே தொழிற்படுகிறது. ஆன்மா, துயில்கொள்வதாக இந்நிலை உறக்கத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அம்மகிழ்ச்சியின் கால அளவை சாக்ஷி அறிகின்றது. எழுந்தபிறகுதான் அதுவரை நன்கு உறங்கியதாக, முன் நினைவைக் கொண்டு கூறுவதிலிருந்து இது தெரிகின்றது. சாக்ஷியினால் ஏற்படும் அறிவிற்கும், மனத்தின் மாறுபாடுகளால் எழுகின்ற அறிவிற்கும் உள்ள வேறுபாடுகள்:
சாக்ஷியினால் ஏற்படும் அறிவு நிலையில் பொருள் உள்ளவாறு அறியப்படுகிறது. ஆனால் மனம் பல மாறுதல்களுக்கு உட்படுகிறபொழுது பொருளை உள்ளவாறு எப்பொழுதும் அறிகிறது என்று கூறுவதற்கு இல்லை. "நான்” என்னும் தன்னுணர்வும் “நான்” என்பது அனுபவித்த மகிழ்ச்சியுணர்வும் என்றும் பொய்யாவன அல்ல. சில சமயங்களில் "இது வெள்ளி என" அறியப்பெறுவது பிழையாகலாம். மேலும், சாக்ஷி நிலையில் ஏற்படும் அறிவு, மனம் மாறுபடுகின்ற நிலைகளில் பெறும் அறிவிற்கு அயலானது. ஆனால் மனம் மாறுபடுகின்ற நிலைகளில் பெறுகின்ற அறிவு சாக்ஷி நிலை அறிவினைச் சார்ந்துள்ளதாகும்.
ஆன்மா, தன்னைப்பற்றி “நான்” எனப்பெறும் அறிவு மனத்தின் துணையின்றியே பெறுகின்றது. புறப்பொருள் பற்றிய அறிவு மனத்தின் துணையின்றியே பெறுகின்றது. புறப்பொருள் பற்றிய அறிவு கால அறிவை உட்படுத்து