உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

65

 கிறது. 'இதுவெள்ளியென' அறிவதில் கால அறிவு உட்படுகிறது. இது சாட்சியால் ஏற்படுகிறது. கால அறிவு மனம் தொழிற்படுதலால் அமைவதாகாது.

கனவு அற்ற தூக்க நிலையில், மனம், தொழிற்படாவிடினும் காலத்தைப் பற்றிய அறிவு உண்டு. சாக்ஷி தன்னைத்தான் வெளிப்படுத்திக்கொள்வதாகும்; பொருளைப் பற்றிய அறிவு தரப்பெறுகின்றபோது, சாக்ஷி தன்னையும் புலப்படுத்திக் கொள்கிறது. ஆனால், மனம் மாறுதல் அடைகின்றபொழுது அறியப்பெறும் பொருள் தனித்த ஒன்றாக அமைகிறது. அதைத்தனியே குறிப்பிடுவது மனத்தின் தொழில் அன்று. அறியப்பெறும் பொருள் தனித்து என்று குறிக்கப்பெறுகிறது. பிரபஞ்சத்தைப் பற்றிய பொதுவான ஒரு உணர்வு முன்னரே அமைதல் வேண்டும்.
இவ்வாறு பிரபஞ்சத்தைப் பற்றித் தெளிவாக அறிவது என்பது மனம் மாறுதடைதலால் பெறுகின்ற அறிவின் எல்லைக்குப் புறம்பாக அமைவதாகும். மனம், மாறுதல் அடைகின்றபோது, குறித்த ஒரு பொருளோடு தொடர்புறுகின்றது. அறிகருவியின் மூலமாக ஒரு பொருளோடு உறவுகொள்ளுகிறது. ஆதலால், சாக்ஷியாக ஆன்மா அறிகின்ற அறிவே, பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு பொதுஉணர்வினைத் தனித்த ஒரு பொருளின் அறிவினின்று பிரித்து உணர்த்துகிறது.
பிரித்து உணர்தல் என்பது புறத்தினின்று ஒரு பொருள்மீது புகுத்துவதன்று. பொருளைப் பொருள் நிலையிலே விளக்குவதாகும். இதனை மறுப்பது தன்னைத்தனே மறுப்பதாகும். மறுப்பு, மறுப்பின்மையினின்று பிரித்து உணரப் பெற வேண்டும்.
அறிவு, என்றும் வரையறை அற்றது அன்று. காட்சி முதல் நிலையில் வரையறை இன்றி இருப்பது என்று கருதுவது தவறாகும். காட்சியில் மனம் மாறுதல்