பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 73 ஞானத்தின் முழு நிலைகளை அறிகின்றபோது மயக்க நிலைகளை அறியாது போதல் இயல்பு. ஆதலால் அவித்தை மயக்கம் முற்றுணர்வு ஆகிய இரண்டையும் ஒருங்கே உணர்தல் வேண்டும். பிரமம் அல்லது ஈசன் மயக்கத்தையும் முற்றுணர்வையும் ஒருங்கே விளை விப்பவன் ஆவான். ஞானத்தின் உண்மையினை நிறுவுவதற்கு மயக்கம் தோற்றுவிக்கப் பெறுகிறது. மயக்கத்தினைப் படைத்தல் என்பது மயக்கத்தை விளைக் கும் அனைத்துச் சூழ்நிலையையும் உருவாக்கி ஞானத்தை மறுக்கச் செய்து ஞானத்தின் உண்மை நிலையினை முடிவிலே நன்கு விளங்கச் செய்வதற்காகும். மேற்குறித்த கருத்துகளை நினைவில் வைத்து ஞானத்தினை வரையறை செய்கிறார். ஞானம் என்பது புறத்திருந்து பதியும் வெறும் பதிவுகளை உணர்தல் ஆகாது. ஆனால், செயல் நிலையிலே, அறிதலும், சிந்தித் தலும், தனதாக்கிக் கொள்ளுதலும் ஆகும்.இவ்வாறு நன்கு புரிந்து கொண்டு, புரிந்தவற்றைச் சிந்தித்து, சிந்தித்தன வற்றைத் தெளித்து ஏற்கனவே உள்ள ஞானத்தோடு பொருந்தவைத்து, தனதாக்கிக் கொள்ளுதல் என்கின்ற நிகழ்ச்சி உட்படுத்தும் கருத்துக்களாவன: ஒன்று, மயக்கத்தை நீங்குதல் ஆகும். இரண்டு, ஞானத்தின் உண்மைநிலையினைத்தெரிந்து பாராட்டுதல் ஆகும். மூன்று, எந்தக் கூறு மேற்குறித்த புரிந்து கொள் ளுதல், சிந்தித்தல், தெளிதல் ஆகியவற்றை உட்படுத்தும் நிகழ்ச்சியி னைத் தொடர்ந்து நிகழச் செய்யுமோ, அதை இருத்திக் கொளல். இந்தக் கூறு, அறிவு, நிகழ்ச்சி தொடர்ந்து நிகழ்தற்கு இன்றியமையாததாகும். மயக்கத் திற்கு ஆதார மாக விளங்குவது அளவை நெறியிலே பிழையுடையது என அறியப்பெருகிறது. ஞானம் குறையற்ற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் எழுப்பப்பெறுவதால் ஏற்புடையதாகும். அறிவு உண்மை