பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



74
த. கோவேந்தன்

யென அறியொணாக் கொள்கையினர் ஏற்கும் வகையில் மாத்வர், நிறுவுகிறார். நிறுவுவதற்கு இருவகை யான அளவைகளைப் பயன்படுத்துகிறார். அறிவு பெறுதற்கு இயலாது என்று கூறுகின்ற ஒருவன் அறிவைப் பற்றி ஏதும் அறியாதவன். அறிவை அறியாத நிலையிலே தனது கருத்தின்படி கண்டனம் செய்கிறான்.அறிவிற்கு என, ஒரு அளவை உண்டு.இவ்வளவையை நன்கு பயன்படுத்தியே அறிவினை நிறுவுகிறான். அறிவின் சிறப்பு, ஒருமுறை அதன் உண்மையாக உணரப்பெற்றால் அதற்குப் பின்பு மறுப்பு நிகழாததாகும். இவ்வுண்மை யினை நன்கு நினைவில் வைத்து அறிவு பெறுதற்கு இயலாது என்று கூறுகிறவர்களை நோக்கி அதிலுள்ள முரண்பாட்டைப் புலப்படுத்தி அதுதானே அழித்துக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறான்.


தன்னைத்தான் நிறுவிக் கொள்கின்ற ஓர் இயல்பினை அறிவிடத்துக் காணலாம். மேலும், மேலும் நிறைவு காண்பதே அறிவின் இயல்பாகும். இவ்வுண்மை யினை நன்கு அறிந்து கொள்ளுதலே உயரிய ஒழுக்கம் என்று மாத்வர் கருதுகிறார் (தவம், உபாசனை, அல்லது தியானம்). மாத்வர் கூறுவது; “ஒரு கணமும், ஒருவன் அறிவின்றி இருத்தல் கூடாது.


இங்கு அறிவு என்று குறிக்கப்பெறுவது பிரமத்தைக் குறித்த மெய்ப்பொருளியல் அறிவு ஆகும். தூக்கத்திலே பிரமத்தைப் பற்றிய அறிவு தடைபடுமானால் விழிப்பு நேர்ந்தவுடன் அவன் தொடர்ந்து பிரம அறிவினைப் பெறுகின்ற முயற்சியில் தலைப்படல் வேண்டும். மெய்ப்பொருளியில் நிகழ்ச்சி முறை, பக்தியும், கருமமும் தமது உண்மை இயல்பிலே ஞானமேயாகும் என நிறுவுகின்றது. ஒரு செய்தியினைப் புரிந்துகொண்டு, சிந்தித்து உணரும் பொருளைத் தன்னுடைய அறிவோடு பொருந்தி உணர்வதே இங்கு நாம் காணும் ஒரு நிகழ்ச்சியாகும். இங்கு பக்தி, கருமம், ஞானம் ஆகிய மூன்றும் இடம்