பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 79 அறிவு அல்லது ஞானம் என்பது பிரம மெய்ப் பொருளியலாகும். பிரமமெய்ப்பொருளாவது பிரமத்தை அறிதல், சிந்தித்தல், தெளிதல் ஆகியவை முறையே நிகழ்வனவாகும். அறிதலாவ்து, வேதத்துள் பிரமத்தைப் பற்றிக் கூறப்பெற்றுள்ள உண்மைகளை உள்ளவாறு அறிதல் ஆகும். உலகியலிலே அனுபவ வழியே, அறியப் பெற்ற விளக்கங்கள் பிரமத்தை அறியப்போதாது. வேதத்தில் அறியப்பெற்ற விளக்கங்கள் நன்கு சிந்தித்தல் அடுத்தநிலையாகும்.வேதத்தில் காணப்பெறும் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கே நினைவில் வைத்து நாமறிந்த உண்மைகளைத் திறன் ஆய்வு முறையில் தெளிதல் இன்றியமையாதது. வேதம் முழுமையாக உணர்த்துகின்ற உண்மையினை அறிதல் வேண்டும் அறிந்த உண்மைகளைச்சிந்தித்து திறன் ஆய்ந்த உண்மைகளாயும் பயன்படுத்தி வேதத்தின் உட் பொருளை அறிதல் வேண்டும் தெளிதல் ஆகும்.இம்முறை யினைத் தியானம் அல்லது வழிபாடு என்று கூறுவர். தியானம் அல்லது வழிபாடு பொதுவாகத் தெரிந்த ஒரு பொருளிடத்துக் கருத்தினைப் பதிய வைத்தல் என்பது அதன் வழக்கமான பொருளாகும்.இவ்வாறு தெரிந்த ஒரு பொருளில் பதியவைத்தல் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடைப்படுத்துவதாகும். பிரம மெய்ப்பொருளியல் பாசங்களினின்று விடு தலை பெற விரும்புகின்ற விருப்பத்தின் வெளியீடாகும். ஆன்மீக முன்னேற்றத்தால் இது விளங்கும். மெய்ப் பொருளியல் மனத்திலே, ஒரு சம நோக்கினை உண்டு பண்ணுகிறது. சமநோக்குப் பெறுகின்ற ஒரு மாணாக்கன், பிரமத்தை, வேதத்தில் விளக்கியுள்ளவாறு அறிகிறாள். இக்காரணத்தால் மாத்வர், மெய்ப்பொருளியலை உயரிய ஒழுங்க நெறியாகக் கருதுகிறார்.