பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 த. கோவேந்தன் மெய்ப்பொருளியல் வேதத்தில் அறிகின்ற ஒர் முயற்சியாகும். வேதம், பிரமத்தையே உட்பொருளாகக் கொண்டு விளங்குவதால், வேதம் பிரம மொழியையே பயிலுகிறது என்று கூறவேண்டும். ஏதாவது ஒரு கருத்து ரையை வேதம் எனக் கொண்டு அக் கருத்துரையின் உண்மையினை நிறுவுவதற்கு மெய்ப்பொருளியல் முயல்வ தில்லை. பிரமமொழியைத் தெரிதலே, பிரமமொழியே வேதம் என அறிதலே மெய்ப்பொருளியலையும் தனது இருவகைத் தோற்றங்களாகக் கொண்டு விளங்குகிறது. பரம்பொருளை அறிகின்ற முறைமையில் மெய்ப் பொருளியல் முதலிலே அமைகிறது; வேத வடிவம் கொள்கிறது. வேத வடிவம் கொள்வதால், பின்னர் எழும் மெய்ப்பொருளியல் வேதத்தின் அடியாக எழுவது இன்றியமையாததாகிறது. இவ்வுண்மையினை மாத்வர் நன்கு உணர்ந்து தன்னை வேதத்தின் உண்மைகளால் இயக்கப் பெறாதவர் என்று குறிக்கிறார். மாத்வர் தன்னைக் கடவுள் சித்தாந்தி அல்ல என்று கூறிக்கொள்கி றார். மாத்வரது இக்கருத்தை ஒட்டியே ஜயதீர்த்தர் பிரம சூத்திரம் வேதத்தைப் பின்பற்றிப் பிரமசூத்திரம் தோன்ற வில்லை எனினும்,வேதத்தின் உட்பொருளைக் காணவும், வரையறை செய்யவும் முற்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். மேலே குறித்த கருத்துகளின் விளக்கம் மாத்வரது பிரம மீமாம்சையை நன்கு விளங்கிக் கொள்ளத் துணை செய்யும். ஆனால் விளங்கிக் கொள்வதில் உள்ள அருமைப்பாடு புலனாகின்றது. இவ்வருமை தவிர்க்க வொணாதது என்று மாத்வர் கூறுகிறார். பிரமத்தை நன்கு அறிதல் என்பது பிரமமாக இருக்கின்ற ஒன்றே அவ்வாறு அறிதல் கூடும் என்பதாகும்.வேத மொழிகளைப் பயின்று, பிரம மெய்ப்பொருளியல் நாராயணன் தன்னை