பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதத்தில் செழித்த வைணவம்

91

முன்னர் அமைந்ததைக் கொண்டு விளங்குகின்றன. படைப்பைப் பற்றிய கருத்து, படைப்பைக் குறித்து அமையும் எப்பகுதிக்கும் பொருந்துவதாகும். வேதத்தில் காணப்பெறும். மற்றொரு பகுதி, "ஆத்மனினின்று இடம் என்பது வெளிதோன்றியது” இப்பகுதிக்குள்ள பொருள் (1) ஆத்மனே விஷ்ணுவாகும். வெளியும் விஷ்ணுவாகும். இப்பொருளின்படி (2) ஆத்மன் விஷ்ணுவாகும்.வெளி எனக் குறிக்கப்பெறுவது, உலகியலிலே குறிக்கப்பெறுகின்ற வெளியாகும். விஷ்ணு வினின்று வெளி தோன்றியது என்றும் வெளி, சார்பற்ற விஷ்ணுவினின்று தோன்றுகிறதென்றும் பொருள் கொள்ள வேண்டும். சார்பற்றதினின்று, சார்புடைய வெளி போன்றவை தோன்றுகின்றன என்ற கருத்தைச் சார்பற்றதன் உண்மையினை அறியப் பயன்படுத்துவோம். அனைத்துச் சொற்களும் உலகியல் பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தும் பொழுது, விஷ்ணுவின் வெவ்வேறு வடிவங்களைக் குறிப்பனவாகவே கொள்ள வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது. இப்பண்பினுக்குப் பொருந்தும் வடிவம் குறிக்கப் பெறுவதாகக் கொள்ள வேண்டும். விஷ்ணுவின் வடிவங்கட்கு ஏற்ப அமையும் உலகியல் பொருள்களில் உள்ளார்ந்த ஆற்றல்கள் விளங்குகின்றன. வடிவங்கள் உளவாதலால், அவற்றிற்கு ஏற்ற பொருள்கள் உளவாகின்றன. மஹா வாக்கியமாகிய (தத்வம். அசி) அதுநீயாக இருக்கின்றாய் என்ற பகுதியை இப்பொழுது காணுவோம். 'தத்' அது என்பது, விஷ்ணு என்று பொருள்படும்; துவம் நீ என்பது (மனிதனுக்கு) ஸ்வேத கேதுவின் மூலமான விஷ்ணுவையே குறிக்கும்; ஸ்வேத கேது என்பதை உணர்த்தும். ஸ்வேத கேதுவாகிய தனி ஆன்மாவுக்கு மூலம், விஷ்ணுவேயாகும். அசி இருக்கிறாய்