பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

த கோவேந்தன்

என்பது, அது என்று குறிக்கப்பெறுவதும். நீ என்று குறிக்கப்பெறுவதும் ஒரே பொருளைக் குறிப்பதாகும் என்பதை வற்புறுத்துகிறது. அது நீ ஆகிய இரண்டனின் முற்றொருமையை விளக்குவதே 'இருக்கிறாய்' என்பது. படைப்பு அனைத்திலும் விஷ்ணு ஒன்றுபடுவதைக் காண்பது இதுவாகும்.விஷ்ணுவே ஒன்றுபடுவதேயாகும். விஷ்ணு, எல்லாம் வல்லவர் என்பதை அறிதல் விஷ்ணு எல்லா நிறையும் உடையவர் என்பதை அறிதலாகும். விஷ்ணுவாகிய இறைவன் சார்பற்றவன்.ஒவ்வொரு சொல்லின் முதற்பொருளும் விஷ்ணுவாகும். ஒரு சொல்லை மற்றப்பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவது. விஷ்ணுவை மறுப்பதாகும். இவ்வுண்மையினை விளக்கு வதற்கு மாத்வர் பொருளைக் குறிப்பதற்குச் சொல் ஏன் பயன்படுத்தப் பெறுகிறது என்பதை முதலில் ஆராய்கிறார். இது மொழியியல் மரபை அடிப்படையாகக் கொண்டது. மாத்வர், சரியான முறையினை வழங்குகிறார். ஒரு சொல், கேட்ட அளவிலேயே ஒரு பொருளை நினைவிற்குக் கொண்டுவருகிறது. ஆதலால், ஒவ்வொரு பொருளும்தம் இயல்பில் சொல்லைத்தனக்குப்பொருத்த வரையறை செய்கின்ற குறிப்புடையதாகும்.இவ்வாறு ஒவ்வொரு பொருளிலே உள்ளமைந்த இயல்பும் தத்துவமே, பொருளைப் பொருளாகச் செய்கிறது. ஆதலால், சொல்லைக் கொண்டு பொருளைக் குறிக்கும் போது பொருள் பெயர் பெறுவதற்குக் காரணமாக விளங்குகின்ற தத்துவத்தையே குறிக்கின்றோம். பொருள் பெயர் பெறுவதற்கு காரணமாகும் தத்துவம்,இறைவனுக்கு அயலாக இல்லை; இறைவனேயாகும். ஒவ்வொரு சொல்லும், இறை வனையே குறிக்கும். திருந்தாத ஒலிகட்கும். இதே விளக்கம் பொருந்தும் ஆற்றிலே ஒடுகின்ற நீர், ஒரு ஒலியினை எழுப்புகிறது.