பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதத்தில் செழித்த வைணவம்

93

விரைந்த நீரோட்டம் வியப்பினை விளைவிக்கிறது. அந்த நீரோட்டத்தின் அடிப்படைத்தத்துவமும் இறைவன் ஆகும். ஆதலால், ஒலி இறையைக் குறிப்பதாகும். இங்கு மாத்வர் மொழியியலின் வளர்ச்சி முறைகளை எல்லாம் ஆராய்கிறார். ஆராய்ந்து வேதம் மொழியின் உயரிய வடிவம் என்ற முடிவு கொள்கிறார். இவ்வாறு கொள்வதற்குக் காரணம் விஷ்ணுவை உட்பொருளாக வேதம் கொள்வதாகும். ஆதலால், வேதம் நன்றாகச் செய்யப் பெற்ற முழுமையான நிறைவுடைய மொழி என்று கூறுகிறார்.

5

பிரமம் கருத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறுவதே அதைக் கருதுவதாகும். பிரமம், அறிவால் அறியப்படும் பொருளாக அமைகிறது. பிரமத்தை வரையறை செய்வது ஏதும் இல்லை. பிரமம் பேரின்பமாகும். பிரமத்தின் படைப்பு பேரின்பமாகும். பேரின்பத்தை அடைதல் விடுதலையாகும். 'பிரமம், அதாவது விஷ்ணு முழுமையுடையது, குறையற்றது. பொருளாவது, இல்ட்சிய்ம் ஆகாது” என மாத்வர் முடிவு கொள்கின்றார்.