பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. எழுத்தில் கொச்சை எழுத்தில் பேச்சு வழக்கைக் கலக்கக் கூடாது எனும் இலக்கண விதி நெடுங்காலம் பின்பற்றப்பட்டு வந்தது பேச்சு மொழியைக் கொச்சை என்று கூறிப் பண்டிதர்கள் ஒதுக்கி வைத்தனர். பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் மாறுபட்டுக் காணப்படுகிறது; இனத்துக்கு இனம் வேறுபட்டிருக்கிறது. எனவே மக்கள் பேசுகிற பாஷையை அப்படி அப்படியே எழுத்தாக்கினுல் குழப்பம் ஏற்படும்; எழுத்தின் புனிதம் கெட்டுவிடும்; படிப்பவர்களுக்கும் எளிதில் விளங்காமல் போகும் என்ற கருத்தும் நிலவிவந்தது. அதனுல், பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது. பேசுவது போல் எளிமையாக எழுதவேண்டும்வழக்கில் உள்ள ஜீவனுள்ள மொழியை எழுத்தாக்க வேண்டும்-என்ற நோக்குடன், உரை நடையில் மறுமலர்ச்சி புகுத்தியவர்கள் கூட, பேச்சு வழக்குகளை அப்படி அப்படியே கையாள்த் தயங்கினர்கள். கதைகளில் கதா பாத்திரங்கள் பேசுகிறவற்றையும் புத்தகத் தமிழில் எழுதுவதுதான் மரபு ஆக ஆளப் பெற்று வந்தது. பாரதியார் கூட, கதா பாத்திரங்களின் உரையாடல்களே எழுத்து நடையில்தான் எழுதினர். அவ்வாறு எழுதுவது தான் முறை, நல்லதும்கூட என்றே அவருக்குப் பின் வந்த படைப்பாளிகளில் பலரும் கருதினர். கல்கி ரா. கிருஷ்ண