பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i56 பாரதிக்குப் பின் மூர்த்தியும் அவரைப் பின்பற்றியவர்களும் இந்த விதியையே ஆதரித்தார்கள். இந் நாட்களில் கூட அநேகர் இந்த மரபை அனுஷ்டிக்கிருரீகன், இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது-மனிதரின் போக்குகளையும் இயல்புகளையும், தன்மைகளையும், தவறுகளை பும், பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் உன்னது உள்ளபடி சித்தரிப்பது-என்ற கொள்கை உடையவர்கள், மனிதரின் பேச்சுக்களையும் உள்ளவாறே எழுத்தில் வழங்க முற்பட்டார்கன்; பேச்சுமுறை இடத்துக்கு இடம் மட்டுமின்றி-இனத்துக்கு இனம் மாத்திரமல்லாது-மனிதனுக்கு மனிதன் மாறுபடுவதும் இயல்பாக இருக்கிறது. தேர்ந்த படைப்பாளி இந் நுணுக் கங்களை எழுத்தாக்குவதில் வெற்றி பெறுகிருன். இலக்கியத்தில் கொச்சையின் இடம்பற்றி வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு பேர் தங்கள் கருத்துக்களை அறிவித்தது உண்டு. ஒரு சந்தர்ப்பத்தில், சுதேசமித்திரன்' தீபாவளி மலரில் லா.ச. ராமாமிருதம் எழுத்தில் கொச்சை' பற்றி தனது எண்ணங்களை அழகான கட்டுரையாக எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையே அருமையான ஒரு படைப்பாக அமைந்திருந்தது. - எழுத்தில் உரை நடையை அதன் பல்வேறு தன்மை களிலும் திறம்படக் கையாள ஆசைப்பட்டு, அதையே தீவிரமாய் சாதகம் செய்து, பெரும் வெற்றிகள் கண்டுள்ள லா. ச. ரா., கொச்சை நடைக்கும் கலை மெருகும், இலக்கிய அந்தஸ்தும் ஏற்றியிருக்கிரு.ர். இதை அவருடைய கதை களில் நன்கு காணலாம். சொற்களுக்கு அழகும் மெருகும் ஜீவனும் சேர்ப்பதில் லா. ச. ரா. அளவுக்கு ஆர்வமும், ஆசையும், முயற்சியும், உழைப்பும், ஆற்றலும் அக்கறையும் கொண்ட படைப்