144
பாரதிக்குப் பின்
விரக்தியும் நம்பிக்கை வரட்சியும் தொனிக்கும் விதத்திலேயே மௌனி தமது கதைகளைப் படைத்திருக்கிறார், அதற்கு ஏற்றாற்போல்தான் அவருடைய எழுத்து நடையும் அமைந்திருக்கிறது.
ஒரு பெண் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட நிலையை. அவளான் வசீகரிக்கப் பெற்றவன், கூறுவது போல மௌனி ஒரு கதையில் வரிணிக்கிறார்.
“அது திருவிழா தான் அல்ல. அவளும் வந்திருத்தாள்...
அவள் பின்னோடு நான் சென்றேன். அநேகம் தரம், அவளைத் தொடக்கூடிய அளவு, அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு. அடிக்கடி என் வாய் ஏதோ முணுமுணுத்ததும் உண்டு. அது, எதையும் சொல்வதற்கல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.
ஈசுவர சந்நிதியில் நின்று, தலைகுனிந்து, அவள் மௌனமாகத் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின், வெகுசமீபத்தில் நான் நின்று இருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருக சர விளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதைக் கண்டேன். அவள் கண்கள், விக்கிரகத்திற்குப் பின் சென்று வாழ்க்கையின், ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப மயத்தைக் கண்டு களித்தன போலும். எவ்வளவு நேரம் அப்படியோ, தெரியறது. காலம் அவள் உருவில் அந்தச் சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது.
தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பியபோது, ஒரு பரவசம் கொண்டவனே போல் என்னையும் அறியாமலே ‘உனக்காக நான் எது செய்யவும்