பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை #45 காத்திருக்கிறேன்; எதையும் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டேன். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்லை. ஆளுல் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள். அவளுக்கு மட்டும்தான தான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்பொழுதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம், எதிர்த்துரணில் ஒன்றி நின்ற யாளி. அவையும் கேட்டு தின்றன என்று எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது, கீற்றுக்கு மேலே, சத்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அத்த விக்கிரகம், உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற பாளி யும் மிக மருண்டு பயந்து கோபித்து முகம் சுளித்தது. பின் கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளேப் பார்த்தேன். அவள் மீ று பக்க ம் திரும்பியிருந்தாள். பின்னிய ஜடை பின் தொங்க, மெதுவாகத் தன்னுடன் கூட வந்தவர்களுடன் சென்ருள், நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலேக்க, அவளுடைய சதங்கைகள் அணிந்த அடிச்சுவடு இன்றி முடியாது போலும். வந்தவர்களுடன் குதுரகலமாகப் பேசி, வார்த்தைகளாடிக் கொண்டே, கால் சதங்கைகள் கணிர் என்று ஒலிக்கப் போய்விட்டாள். சந்நிதியின் மெளனம், அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில், சிதைவுற்றது. வெளவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குறுக்கும் நெடுக்கும்ாகப் பறந்தன.’ (அழியாச் சுடர்) இதே போன்றதொரு கட்டம், லா, ச. ரா. கதையில். ஒருத்தி தெய்வ வழிபாடு பண்ணுகிற போது அவளுடைய அன்பன் அவளேயே கவனித்திருக்கிற நிலை. அது பின்வரு மாறு சித்திரிக்கப்படுகிறது