பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பாரதிக்குப் பின் 'தன் ஆழத்துள் ஜலம் நலுங்கியது போல புன்னகை முகத்தில் இளகுகையில் தனக்குத் தானே அது அனுப வித்துக்கொள்ளும் ரகசியந்தான் என்ன? ஜ ல த் தி ன் முகத்தின் நிழல் தெரிவது போல, அவன் முகத்தில் அவள் அகத்தைக் கண்டாள்.” இவை சில உதாரணங்கள். மெளனியும் உவமை கூறி விளக்குவதில் ஆர்வம் காட்டு இருள். ஆளுல் அவர் போல என்பதை உபயோகிப்பைதி விட, போன்று என்று எழுதுவதில்தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளார். "தனிப்பட்டு, தலைவிரி கோலத்தில் நின்று, மெளன மாகப் புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன் றியது." 'இன்பமான இளம் வெய்யிலும், உடனே அது மேக மறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அவன் மூடிய கண்களினின்றும் கண்ணிர் சொட்ட ஆரம்பித்தது.” “ஆகாயத்தில், இருட்யாய் விரிப்பின் நடு நடுவே: வெளிச்சப்புள்ளி வர்ணத் தீட்டிக் கொண்டதே போன்று எண்ணிலா நட்சத்திரங்கள் பிரகாசித்தன. அவை ஆழ்ந்த துக்கத்தில் உதிராது, மடியாது, ஐயமுற்று வினவி நிற்பவை போன்று தோன்றின.” சங்கீதம், வீணை, சுரம் முதலியவை இருவர் எழுத்துக் களிலும் வருகின்றன-உவமையாகவும், சிந்தனையாகவும், கதையின் உயிரோட்டமாகவும் அவை புதுமையாகத் திகழ் கின்றன. "வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் தெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்து ஒரு வேளையின் பொகுத்