உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

வெறும் எழுத்தும் ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் மாத்திரமே இலக்கியம் ஆகிவிட முடியாது. உள்ளதை உள்ளபடி காட்டுவதோ, அல்லது வெறும் கற்பனைக்கு உருக்கொடுப்பதோ, அனுபவத்தை விவரிப்பதோ, இவைகளுக்கு இன்றியமையாதனவாகிய வார்த்தைகளின் வெறும் ஜோடனையோ மாத்திரம் இலக்கியத்தின் இலக்கியம் அல்ல. வாழ்க்கையின் பண்பே இலக்கியம். இத்தனை சாமர்த்தியங்களையும் மீறி நிறைவு என்று ஒன்று இருக்கிறது. வாழ்க்கையே அதை நோக்கித்தான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. நெஞ்சும் இதயமும் ஒன்றாய் இழைந்து, சமயமும் சேருகையில் நிறைவின் சாயைகளை ஒரு சமயம் நாமும் அறிந்தோ அறியாமலோ தொடுகிறோம். ஒரு பக்கத்திலோ ஒரு வாக்கியத்திலோ, ஒரு சொற்றொடரிலோ, பதத்திலோ, அல்லது இரு பதங்களிடையில் தொக்கி, நம் முன்னேயே நின்று கொண்டு நம்மைத் தடுக்கும் ஒரு அணு நேர மௌனத்திலோ, நம் உண்மையான தன்மையை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். அப்படி ஏற்படும் சமாதி நிலையில் கொச்சையின் சிலம்பொலி தனித்து எழுகிறது.

கொச்சையை வெறும் பேச்சளவில் கொண்டு அதற்குத் தீர்ப்பளித்தல் முறையல்ல. ஏனெனில் பேச்சு மாத்திரம் பாஷையாகி விடாது. உடல், உள்ளக் கிளர்ச்சியைத் தனக்கோ பிறருக்கோ, வாக்காலோ, சைகையாலோ, வெளிப்படுத்திக் கொள்ள ஏற்பட்ட வழிதான் பாஷை என்று கொள்ளுதல் தவறாகாது. அவ்வழியின் ஒரு பெருங்கிளை ஓசை, ஓசையிலிருந்து வாக்கு; வாக்கின் ஆரம்ப, ஆதார உருக்களே கொச்சை என்று நாம் உணருதல் வேண்டும்.

ஆகையால், பேச்சின் உயிர் மூச்சு கொச்சை. உள்ளக் கிளர்ச்சியிலிருந்து நேரிடையாக உருவாகும் கொச்சை, சத்தியத்தின் பாஷை. சத்தியம் எந்த வரம்பிற்கும் அடங்-

பா—10